google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: மஹாலக்ஷ்மி யாருக்கு என்ன அருளுவாள் ?

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

மஹாலக்ஷ்மி யாருக்கு என்ன அருளுவாள் ?

 

நல்வழி வெண்பா: 21


“நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும்ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்.”

விளக்கம்:
பிறருக்கு துன்பம் செய்யாதவருக்கு, அடுத்தவர் அழிய வேண்டும் என்ற வஞ்சனை இல்லாதவருக்கு, நல்ல நீர்வளம், நிழல் தரும் மரங்கள், நெல் வளம், பேரும், புகழும், சிறப்பான வாழ்க்கையும், நல்ல வீடும், தேவையான செல்வமும், நீண்ட ஆயுளும் செந்தாமரையில் அமரும் மஹாலக்ஷ்மி அருளுவாள்.


1 கருத்து:

  1. அக்காலத்தில் நகர் என்னும் சொல்லால் அரண்மனையைக் குறிப்பிட்டனர். இக்காலத்தில் நகர் என்பது பேரூர். இந்த வழியில் ஊர் என்னும் சொல்லுக்கு நல்ல வீடு எனப் பொருள் கண்டிருப்பது அருமை

    பதிலளிநீக்கு

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?