google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: மே 2020

வியாழன், 21 மே, 2020

முன்னாள் ராணுவ வீரர்கள் சிகிச்சைக்கு முன்பதிவு


முன்னாள் ராணுவ வீரர்கள் சிகிச்சைக்கு முன்பதிவு

மதுரை, மதுரையில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மருத்துவமனையில் முன் அனுமதி பெற்று சிகிச்சை பெறலாம். இதன் பொறுப்பு அதிகாரி ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் லாசர்ஸ் தெரிவித்துள்ளதாவது: இம்மருத்துவமனையில் முன்னாள் படை வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் என 22 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு கொரோனாவை கட்டுப்படுத்தவும், தேவையற்ற கூட்டத்தை தவிர்க்கவும் சில விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளோம். 0452 - 264 0410 என்ற எண்ணில் முன்அனுமதி பெற்று டாக்டரை சந்திக்க வர வேண்டும். அவசர சிகிச்சைக்கு விதிவிலக்கு உண்டு. முககவசம், சமூக இடைவெளி, ஆரோக்கிய சேது செயலி கட்டாயம். சிகிச்சை தேவைப்படுவோர் மட்டும் வரவேண்டும். ஊரடங்கால் மருந்து வழங்க முடியாததால், ஏப்., மே மாதங்களுக்கான மருந்துகளை ஏதாவது மருந்தகங்களில் பெற்றுக்கொண்டு, அதன் ரசீதை ஜூன் 15க்கு பின் வழங்கி பணமாக பெறலாம், என்றார்.


-நன்றி தினமலர் மதுரை 21 மே 2020






கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...