google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: கிருஷ்ண ஜெயந்தி சீடை

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

கிருஷ்ண ஜெயந்தி சீடை


வேறு முறை
சுவையான உப்பு சீடை
இது கிருஷ்ண ஜெயந்தி நாளில் செய்யப்படும் பலகாரமாகும்.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி: 2 கப்
உளுந்து மாவு: ஒரு பிடி
தேங்காய் துருவல்: 2 டேபிள் ஸ்பூன்
எள்: 2 டீ ஸ்பூன்
பெருங்காயப் பொடி: 1/4 டீ ஸ்பூன்
வெண்ணெய்: 1 டேபிள் ஸ்பூன்
உப்பு: தேவையான அளவு
எண்ணெய்: பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:
முதலில் அரிசியை களைந்து உலர்த்த வேண்டும். நன்றாக உலர்ந்ததும், மாவாக அரைத்து, சலித்து வைக்கவும். எள்ளை சுத்தமாக எடுத்து வைக்கவும். தேங்காயை துருவி அளந்து எடுத்துக்கொள்ளவும். அகலமான ஒரு பேசினில் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, எள், தேங்காய் துருவல், பெருங்காயப் பொடி, உப்பு, வெண்ணெய் எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும். வெண்ணெய் நன்கு கலந்ததும், லேசாக தண்ணீர் விட்டு பிசையவும். மாவு நல்ல கெட்டிப் பதமாக இருக்கவேண்டும். பின்னர் அந்த மாவை லேசாக எண்ணெய் தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்ன 'சீடை" களாக உருட்டி வைக்கவும். அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான சத்தான 'உப்பு சீடை' ரெடி.


சீடை தயாரிப்பதில் முக்கியமாக மாவு சுத்தமாக இருக்கவேண்டும். அதில் கல், மண் எதுவும் இல்லாமல் சுத்தமாக அரைத்த மாவை பயன்படுத்தவேண்டும். எள் போடும் போதும் சுத்தமானதாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் சீடை வெடிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...