சத்தியமே....
லட்சியமாய் கொள்ளடா
தலை
நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
சத்தியமே
லட்சியமாய் கொள்ளடா
தலை
நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
சத்தியமே
லட்சியமாய் கொள்ளடா... செல்லடா
எத்தனையோ
மேடு பள்ளம் வழியிலே உன்னை
இடர
வைத்து தள்ள பார்க்கும் குழியிலே
எத்தனையோ
மேடு பள்ளம் வழியிலே உன்னை
இடர
வைத்து தள்ள பார்க்கும் குழியிலே
அத்தனையும்
தாண்டி காலை முன் வையடா
அத்தனையும்
தாண்டி காலை முன் வையடா
நீ
அஞ்சாமல்
கடமையிலே கண் வையடா
சத்தியமே
லட்சியமாய் கொள்ளடா செல்லடா
குள்ள
நரி கூட்டம் வந்து கு
றுக்கிடும்
நல்லவர்க்கு
தொல்லை தந்து மடக்கிடும்
குள்ள
நரி கூட்டம் வந்து கு
றுக்கிடும்
நல்லவர்க்கு
தொல்லை தந்து மடக்கிடும்...நீ
எள்ளளவும்
பயம் கொண்டு மயங்காதேடா
எள்ளளவும்
பயம் கொண்டு மயங்காதேடா - அவற்றை
எமனுலகுக்கனுப்பி
வைக்க தயங்காதேடா
சத்தியமே
லட்சியமாய் கொள்ளடா
தலை
நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
சத்தியமே
லட்சியமாய் கொள்ளடா செல்லடா...
செல்லடா
---
பாடலாசிரியர்: மருதகாசி
படம்: நீலமலைத்
திருடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.