google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஆகஸ்ட் 2019

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

தந்தை தாய் இருந்தால்



பாடியவர்: N.C. வசந்தகோகிலம் பாடல்: தந்தை தாய் இருந்தால் இயற்றியவர்: பொன்னையாப்பிள்ளை இராகம்: சண்முகப்ரியா

தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ அய்யா.............................. தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ அய்யா - பெற்ற தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ அய்யா அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே அருமை உடனே பெற்று பெருமை உடன் வளர்த்த அருமை உடனே பெற்று பெருமை உடன் வளர்த்த தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ அய்யா கல்லால் ஒருவன் அடிக்க ...... கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க வில்லால் ஒருவன் அடிக்க காண்டீபம் என்னும் வில்லால் ஒருவன் அடிக்க கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட வீசி மதுரை மாறன்.....ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க அந்த வேளை யாரை நினைந்தீரோ .... அய்யா ..... பெற்ற தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ அய்யா தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ அய்யா

From:
https://www.youtube.com/watch?v=Y7mIOTG1WYE

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

கிருஷ்ண ஜெயந்தி சீடை


வேறு முறை
சுவையான உப்பு சீடை
இது கிருஷ்ண ஜெயந்தி நாளில் செய்யப்படும் பலகாரமாகும்.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி: 2 கப்
உளுந்து மாவு: ஒரு பிடி
தேங்காய் துருவல்: 2 டேபிள் ஸ்பூன்
எள்: 2 டீ ஸ்பூன்
பெருங்காயப் பொடி: 1/4 டீ ஸ்பூன்
வெண்ணெய்: 1 டேபிள் ஸ்பூன்
உப்பு: தேவையான அளவு
எண்ணெய்: பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:
முதலில் அரிசியை களைந்து உலர்த்த வேண்டும். நன்றாக உலர்ந்ததும், மாவாக அரைத்து, சலித்து வைக்கவும். எள்ளை சுத்தமாக எடுத்து வைக்கவும். தேங்காயை துருவி அளந்து எடுத்துக்கொள்ளவும். அகலமான ஒரு பேசினில் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, எள், தேங்காய் துருவல், பெருங்காயப் பொடி, உப்பு, வெண்ணெய் எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும். வெண்ணெய் நன்கு கலந்ததும், லேசாக தண்ணீர் விட்டு பிசையவும். மாவு நல்ல கெட்டிப் பதமாக இருக்கவேண்டும். பின்னர் அந்த மாவை லேசாக எண்ணெய் தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்ன 'சீடை" களாக உருட்டி வைக்கவும். அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான சத்தான 'உப்பு சீடை' ரெடி.


சீடை தயாரிப்பதில் முக்கியமாக மாவு சுத்தமாக இருக்கவேண்டும். அதில் கல், மண் எதுவும் இல்லாமல் சுத்தமாக அரைத்த மாவை பயன்படுத்தவேண்டும். எள் போடும் போதும் சுத்தமானதாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் சீடை வெடிக்கும்.

புதன், 14 ஆகஸ்ட், 2019

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா




சத்தியமே.... லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா... செல்லடா

எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
இடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலே
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
இடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா நீ
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா செல்லடா

குள்ள நரி கூட்டம் வந்து கு றுக்கிடும்
நல்லவர்க்கு தொல்லை தந்து மடக்கிடும்
குள்ள நரி கூட்டம் வந்து கு றுக்கிடும்
நல்லவர்க்கு தொல்லை தந்து மடக்கிடும்...நீ
எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா
எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா - அவற்றை
எமனுலகுக்கனுப்பி வைக்க தயங்காதேடா

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா செல்லடா...
செல்லடா
---

பாடலாசிரியர்: மருதகாசி
படம்:  நீலமலைத் திருடன்

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

நின்ற கோலத்தில் அத்திவரதர்




நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர்
ஆகஸ்ட் 1, 2019
அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதியான இன்று முதல்  இள சந்தனம் பட்டாடை உடுத்தி பல வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கபட்டு நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.


கடந்த ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து ஜூலை 31-ம் தேதி வரை அத்தி வரதர் சயன திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். ஒரு நாளைக்கு சராசரியாக 2 லட்சத்திலிருந்து 3 லட்சம் வரை பக்தர்கள் சயன கோலத்தில் அருள்பாலித்த அத்தி வரதரை தரிசனம் மேற்கொண்டுனர்.

கடந்த 31 நாட்களில் ஏறத்தாழ 48 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசால் ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 17-ம் தேதி வரை அத்திவரதர் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நின்ற திருக்கோலத்தில் அத்திவரதரை நிறுத்துவதற்கு உண்டான முன் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக நேற்று மாலை 5 மணியுடன் சயன திருக்கோலத்தில் அருள் பாலிக்கும் அத்தி வரதரை தரிசிப்பதற்கு உண்டான கால அவகாசம் நிறைவடைந்தது.

மாலை 5 மணிக்குப் பிறகு, சரியாக 8:30 மணியிலிருந்து இரவு 11 மணி வரை அத்திவரதரை நின்ற திருக்கோலத்தில் நிறுத்துவதற்கு உண்டான பணிகள் இந்து அறநிலை துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டது. நேற்று மதியம் 3 மணியில் இருந்தே பக்தர்கள் நின்ற திருக்கோலத்தில் அத்தி வரதரை தரிசனம் மேற்கொள்வதற்காக வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் இருக்கக்கூடிய பகுதிகளில் காத்திருந்தனர்.

இன்று காலை சரியாக 5:25 மணிக்கு நின்ற திருக்கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அமைதியாக வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

சயன திருக்கோலத்தில் அத்திவரதரை தரிசனம் மேற்கொண்டவர்கள் மீண்டும் நின்ற திருக்கோலத்தில் காண வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சராசரியாக ஒரு நாளைக்கு 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை பக்தர்கள் தரிசனம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்பதனால் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவ வசதி கழிவறை வசதி குடிநீர் வசதி என அனைத்துமே இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் இருக்கக்கூடிய காலி இடங்களில் 10,000 பக்தர்கள் தங்குவதற்கு உண்டான தற்காலிக கூடாரங்கள் 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

கோயில் வளாகத்துக்குள் பக்தர்களுடைய எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் போது பக்தர்களை கூடாரங்களில் தங்க வைக்கவும் பகுதி பகுதியாக பிரித்து அவர்களை அனுப்பி வைக்கவும்  உண்டான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

மேலும் அந்த கூடாரங்களை சுற்றி கழிவறைகளும் குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 24 மணி நேரம் அன்னதானமும் வழங்க ஏற்படு செய்யப்பட்டுள்ளது.

மேலும் காவலர்களின் எண்ணிக்கை 5,000 இருந்து 7,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 31 நாட்களில் காஞ்சிபுரம் நகருக்குள் ஏறத்தாழ 7 லட்சத்திற்கும் அதிகமான வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில வாகனங்கள் வந்துள்ளன. அத்தி வரதரை தரிசிக்க கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.

அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் எந்தவித ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அமைதியாக வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பாக உள்ளது என்று மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நன்றி: 



ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?