புறநானூறு 277, பாடியவர் – பூங்கணுத்திரையார், திணை – தும்பை, துறை – உவகைக்
கலுழ்ச்சி
மீன் உண் கொக்கின் தூவி அன்ன,
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்,
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே, கண்ணீர்
நோன் கழை துயல்வரும் வெதிரத்து
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே.
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்,
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே, கண்ணீர்
நோன் கழை துயல்வரும் வெதிரத்து
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே.
பின்னணி: போருக்குச் சென்ற தன் மகன் விழுப்புண்பட்டு இறந்தான் என்ற
செய்தியைக் கேட்டு ஒரு முதிய தாய் பெருமையால் மகிழ்ந்து கண்ணீர் வடித்தாள்.
பூங்கணுத்திரையார் அவளது மறமாண்பு கண்டு வியந்து எழுதிய பாடல் இது.
பொருளுரை: மீன் உண்ணும் கொக்கின் இறகுகளைப் போல்
வெண்மையான நரைத்த கூந்தலை உடைய முதிய தாய், தன் மகன் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன்
அடைந்த மகிழ்ச்சி, அவள் அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை
விட அதிகமானது.
அவளுடைய
கண்ணீர்த் துளிகள், வலிய மூங்கிலில் தொங்கிச் சொட்டும் மழைத்
துளிகளை விட அதிகமானவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.