google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: கந்தர் அநுபூதி

சனி, 10 மார்ச், 2018

கந்தர் அநுபூதி


உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
___ அருணகிரிநாதர்

பொருள்:
உருவமுள்ளவராகவும், உருவமில்லாதவராகவும், உள்ள பொருளாகவும், காணவியலாத பொருளாகவும், நறுமணமாகவும், அந்த நறுமணத்தை உடைய மலராகவும், இரத்தினமாகவும் அந்த இரத்தினம் வீசும் ஒளியாகவும், உயிர் இடம்பெறும் கருவாகவும், உடலாகவும், உயிராகவும் நற்கதியான புகலிடமாகவும் அந்த நற்கதியை நோக்கிச் செலுத்தும் விதியாகவும் விளங்கும் குகமூர்த்தியே! (முருகனே! ) தேவரீர் குருமூர்த்தியாக எழுந்தருளிவந்து அடியேனுக்கு அருள்புரிவீராக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...