ஆராரோ ஆரிரரோ கண்ணே நீ ஆராரோ
மாசிப் பிறையோ நீ வைகாசி மாங்கனியோ
நேசப்பிறையோ நீ தெவிட்டாத செங்கரும்போ
எங்கள் குலம் மங்காமல் எதிர் குலத்தோர் ஏசாமல்
தங்கமலி பொக்கிஷத்தைத் தானாள வந்த கண்ணோ
தித்திக்கும் பாலோ என் தெவிட்டாத தெள்ளமுதோ
தித்திப்பின் உள்ளிருக்கும் செங்கரும்பே கண்வளராய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.