தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.
நூல்: திரிகடுகம்
ஆசிரியர்: நல்லாதனார்
பாடல் எண்: 12
கருத்து:
முயற்சியை ஆளக் கூடிய திறமையுடைய ஒருவன் பிறருக்கு கடன்படாது வாழ்பவன் ஆவான்.பயிர்த்தொழில் புரிந்து,சமூகத்திற்கே உதவியாக இருப்பவன், விருந்தினர் காத்திருக்க, தான் மட்டும் உண்ணாதவன்ஆவான். ஒற்றாடலில் சிறந்தவன், பிறரின் காரியங்களை, கருத்துக்களை அறிந்து சொல்பவன், சிறிதுகூட மறதி இல்லாதவன்ஆவான். இம்மூன்று இயல்புடையவர்களையும் நண்பர்களாகப் பெற்று வாழ்தல் இனிமையாகும்.
அருஞ்சொற்பொருள்:
தாளாளன்-முயற்சியைக் கொண்டிருப்பவன்
; வேளாளன் - உதவி செய்பவன், பயிர்த்தொழில் புரியும் ஒருவன் ; கோளாளன் - ஒற்றாடல் திறனில்
வல்லவன்,பிறரின் காரியங்களை மனதில் கொண்டவன் ; கேள் – நட்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.