எங்களுக்கு சிறந்த அறிவாற்றலைக் கொடு, ஊக்கத்துடன் பணிபுரிய சக்தியைக் கொடு, எங்களுக்கு வரும் துன்பங்களை நீக்கி, மனிதர்களாகிய எங்கள் மனதிலுள்ள பேதங்களை நீக்கி எங்களுக்கு என்றென்றும் அமைதியை மட்டும் கொடுப்பீராக.
வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021
சாந்தி மந்திரம்
எங்களுக்கு சிறந்த அறிவாற்றலைக் கொடு, ஊக்கத்துடன் பணிபுரிய சக்தியைக் கொடு, எங்களுக்கு வரும் துன்பங்களை நீக்கி, மனிதர்களாகிய எங்கள் மனதிலுள்ள பேதங்களை நீக்கி எங்களுக்கு என்றென்றும் அமைதியை மட்டும் கொடுப்பீராக.
திருக்குறள் 828
— புலியூர்க் கேசிகன்
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே. (௮௱௨௰௮)
— மு. வரதராசன்
பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே. (௮௱௨௰௮)
— சாலமன் பாப்பையா
பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும் (௮௱௨௰௮)
— மு. கருணாநிதி
மணக்குடவர் உரை: தொழுதகையுள்ளும் கொலைக்கருவி ஒடுங்கும்: பகைவர் அழுதகண்ணீரும் அத்தன்மையதாமென்று கொள்க.
மெல்லியராகத் தொழுதுவந்து ஒத்தார்போல ஒழுகுவாரது நட்பென்றவாறு. இது கூடாநட்பினால்வருங் குற்றங் கூறிற்று. கூடா நட்பினர் வேறு காலத்தினும் அழுதகாலத்தினும் தேறப்படாரென்க.
பரிமேலழகர் உரை: ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - ஒன்னார் குறிப்பை உணர வல்லார்க்கு அவர் தொழுத கையகத்தும் படைக்கலம் மறைந்திருக்கும்: அழுத கண்ணீரும் அனைத்து - அவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அது மறைந்திருத்தற்கு இடனாம்.
(தாம் நட்பு என்பதனைத் தம் கையானும் கண்ணானும் தேற்றிப் பின் கோறற்கு வாங்க இருக்கின்ற படைக்கலம் உய்த்துணர்வழித் தேற்றுகின்ற பொழுதே அவற்றுள்ளே தோன்றும் என்பார். 'ஒடுங்கும்' என்றார். பகைவர் தம் மென்மை காட்டித் தொழினும், அழினும், அவர் குறிப்பையே நோக்கிக் காக்க என்பதாம். இதனான் 'அவரைச் செயலால் தெளியற்க'' என்பது கூறப்பட்டது.)
இரா சாரங்கபாணி உரை: பகைவர் தொழுவதற்குக் கூப்பிய கையகத்தும் படைக்கருவி மறைந்திருக்கும். அப்பகைவர் அழுத கண்ணீரும் அது போன்றே ஒன்றை மறைத்தற்கு இடனாகும்.
பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑀓𑁃 𑀬𑀼𑀴𑁆𑀴𑀼𑀫𑁆 𑀧𑀝𑁃𑀬𑁄𑁆𑀝𑀼𑀗𑁆𑀓𑀼𑀫𑁆 𑀑𑁆𑀷𑁆𑀷𑀸𑀭𑁆
𑀅𑀵𑀼𑀢𑀓𑀡𑁆 𑀡𑀻𑀭𑀼𑀫𑁆 𑀅𑀷𑁃𑀢𑁆𑀢𑀼 (𑁙𑁤𑁜𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)
ஆங்கிலம் (English)
Thozhudhakai Yullum Pataiyotungum Onnaar
Azhudhakan Neerum Anaiththu
— (Transliteration)
toḻutakai yuḷḷum paṭaiyoṭuṅkum oṉṉār
aḻutakaṇ ṇīrum aṉaittu.
— (Transliteration)
Like a dagger concealed in folded hands Is the mourning tears of foes.
ஹிந்தி (हिन्दी)
जुड़े हाथ में शत्रु के, छिप रहता हथियार ।
वैसी ही रिपु की रही, रुदन-अश्रु-जल-धार ॥ (८२८)
தெலுங்கு (తెలుగు)
దండమన్న చేతి దాపున క్రూరస్త్ర
మణఁచగలడు శత్రువైనవాడు. (౮౨౮)
மலையாளம் (മലയാളം)
വണങ്ങും കൂപ്പുകൈക്കുള്ളിലായുധം ശത്രുവേന്തിടും ശത്രു ചിന്തുന്ന കണ്ണീരുമാപൽ സൂചകമായിടും (൮൱൨൰൮)
கன்னடம் (ಕನ್ನಡ)
(ಹಗೆಗಳು) ಕೈಮುಗಿದು ನಮಸ್ಕರಿಸುವಾಗಲೂ ಕೈಯೊಳಗೆ ಆಯುಧವನ್ನು ಅಡಗಿಸಿಟ್ಟುಕೊಂಡಿರುತ್ತಾರೆ; ಅವರು ಅತ್ತು ಸುರಿಸುವ ಕಾಣ್ಣೀರು ಕೂಡ ಅದೇ ಬಗೆಯದು (ವಂಚನೆಯಿಂದ ಕೂಡಿದುದು) (೮೨೮)
சமஸ்கிருதம் (संस्कृतम्)
शत्रोरञ्जलिमश्येऽपि छन्न: स्यात् कठिनायुध: ।
तथा शत्रोरश्रुपात: क्रूरायुधसमो भवेत् ॥ (८२८)
சிங்களம் (සිංහල)
මුදුනත් බැඳ නැමති - අත තූළ අවිය සැඟ වේ එමෙන් සතූරන් හෙලු - කඳුලු බිඳුවත් බයානක වේ
சீனம் (汉语)
敵人拱手, 乃藏刀於下; 敵人之淚, 亦無誠意. (八百二十八)
மலாய் (Melayu)
Malah di-dalam tangan-nya yang menyembah, sahabat palsu me- nyembunyi keris: juga jangan di-perchayai ayer mata-nya yang me- rintis.
கொரிய (한국어)
적이손을합장하고있더라도팔은감출수있다.마찬가지로, 눈물속에위험을숨기고있을수있다. (八百二十八)
உருசிய (Русский)
Притворные слезы твоих врагов должны вызывать такую же веру, как руки, сложенные перед грудью для приветствия, но прячущие кинжал
إن الصديق الكاذب مع أنه يرفع يديه امامك متصلة فى الإحترام لك فلا تشق به عند ما تدمع عيناه لأنه يضمر لك الحقد والضغينة (٨٢٨)
பிரெஞ்சு (Français)
Pour ceux qui savent discerner, une arme peut être cachée dans les mains jointes de l'ennemi (signe du respect); il en va de même de ses larmes.
ஜெர்மன் (Deutsch)
In den aneinandergelegten Händen der Feinde können sich Waffen verbergen - Tranen sind auch von dieser Natur.
சுவீடிய (Svenska)
Såsom fiendens händer höjda till ödmjuk hälsning kan dölja en dolk är det med hans hycklande tårar.
இலத்தீன் (Latīna)
Etiam in manibus ad subjectionem significandam sublatis telum occultatur: lacrimae hostium similes sunt. (DCCCXXVIII)
போலிய (Polski)
Ręce skromnie złożone piastują puginał, W gniewnych łzach drzemie wściekłość i siła.
ஏன் இப்படி?
இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?
-
கோயில் – திருவிருத்தம் குனித்த புருவமும் , கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் , பனித்த சடையும் , பவளம் போல் மேனியில் பால...
-
நந்தனார் படத்திலிருந்து தண்டபாணி தேசிகர் வள்ளலாரின் திருவருட்பா பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மற...
-
பெற்ற தாய்தனை மகமறந் தாலும் பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் உயிரை மேவிய உடல்மறந் தாலும் ...