google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஜனவரி 2021

செவ்வாய், 19 ஜனவரி, 2021

விவசாயத்தில் அடைந்துள்ள முன்னேற்றம் என்ன? சட்டமன்றத்தில் அண்ணா உரை

அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்              

விவசாயத்தில் அடைந்துள்ள முன்னேற்றம் என்ன?

சட்டமன்றத்தில் அண்ணா உரை 

சட்டமன்றத்தில் அண்ணா அவர்கள் வரவுசெலவுத் திட்டத்தின் மீது பேசுகையில் விவசாயத்துறை பற்றிக் குறிப்பிட்டதாவது

விவசாயம் ஓரளவிற்கு வளர்ந்திருக்கிறது என்பதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. புள்ளிவிவரங்கள் மட்டுமல்லகண் படைத்த யாருக்கும் அது தெரியும். நேற்றுவரை காடுகரம்பாக இருந்த நிலங்கள் இன்று கழனியாக இருக்கிறது. முன்பு ஒருபோசச் சாகுபடி செய்த நிலங்களில் இன்று இருபோகச் சாகுபடி செய்யப்படுகிறது. நேற்று வரப்பில்லாத புறம்போக்கு நிலங்களாக இருந்தா நிலங்கள் வரப்பு போடப்பட்டு இன்று வயல்வெளியாகக் காணப்படுகின்றன. கண் படைத்த யாரும் இதை இல்லை என்று சொல்ல முடியாது

ஆனால் பெருகியிருக்கிற விவசாயத்தினுடைய பலன் யாருக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது? உழவர்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறதா? வியாபாரிகளுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறதா? அல்லது நேராகக் கால்வாய் வெட்டினாற்போல் சர்க்கார் கஜானாவுக்குப் போய் சேர்ந்திருக்கிறதா? அந்தப் புள்ளி விவரத்தைக் கணக்க எடுத்து அருள் கூர்ந்து ஆராய்ந்து துரைத்தனத்தார் பார்த்திருக்க வேண்டும். ‘இதற்கெல்லாம் கணக்கு இருக்கிறது. நீலநிற புத்தகத்தில் 6வது பக்கம் 17 ஆவது வரி என்று கணக்கைக் காட்டாதீர்கள். இந்தக் கணக்குத் துறை இலாகாவே ஏற்றுக் கொள்கிறது. உண்மையிலேயே நாட்டு மக்கள் இன்றைய தினம் அடைந்திருக்கிற அவல நிலைமையைக் கணக்கெடுத்து இந்தப்பலன் அங்கே போய் இருக்கிறதா என்று பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்

தக்க பலன் கிடைக்கவில்லை

நான் அறிந்தவரையில் அந்தப் புத்தகத்தில் கூட நம்முடைய நிதி அமைச்சர் 2, 3 நாட்களுக்கு முன்பு என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்துஓய்வு இருந்தால் படித்துப் பாருங்கள்என்று சொன்னார். ஆகையால் சொல்கிறேன்அதிலே சொல்லியிருக்கிறதுகிடைத்த விவசாய வருமானத்தின் பலனில் 30 பங்கு மேல் மட்டத்தில் உள்ள மிராசுதாரர்களிடம் போய் இருக்கிறது. மற்ற அனைத்தும் மக்களிடையே பரவியிருக்கிறது. ஆகையால் தகுந்த பலன் கிடைக்கவில்லை என்பது அவர்கள் எனக்கு அளித்த புத்தகத்தில் மிக அழகாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“This significant increase in the per capita income has taken place only in a few states. If as much as 30% of the increase in the period has accrues to the higher income group. Is it surprising that the bulk of the population of this country should that, they have not benefited in any obvious way from the development of the last decade?

ஏற்பட்ட முன்னேற்றத்தில் இந்த அளவு முன்னேற்றம் தான் மக்களுக்குக் கிடைத்திருக்கிறது என்று மக்களது மனதிலே சலிப்பு உணர்ச்சி இருந்தால் அது ஆச்சரியமா என்று அந்தப் புத்தகத்திலேயே கேட்கப்பட்டிருக்கிறது. அதிலேயே அதற்குப் பதில் இருக்கிறது என்று சொல்லலாம். அதைக்கூட நிதியமைச்சர் வேண்டுமானால் உபயோகப்படுத்தலாம். எனக்கு உபயோகப்படவேண்டிய அளவிற்கு உபயோகப்படுத்தப்பட்டு விட்டது !குறுக்கீடு) நம்முடைய அமைச்சர் அவர்கள் அவருக்கு வேறு இருப்பதாகச் சொல்கிறார்கள். அவரிடம் இந்த 4 ஆண்டுகளில் பெற்ற ஒன்றுமில்லை. எனக்கு இதையாவது கொடுத்திருக்கிறார் என்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

விவசாய வருவாய் ஏழைகளுக்குக் கிடைத்ததா?

விவசாயத்திலே கிடைக்கக்கூடிய வருவாயில் போதிய வருவாய் ஏழை எளியவர்களுக்குப் போய்ச் சேரவில்லை என்பதற்கு நல்ல தெளிவான கணக்கு இருக்கிறது என்று நமக்குத் தெரிகிறது. காரணம் கிராமங்களைப் பார்க்கும் போது தெரிகிறது 10 ஆண்டுக் காலத்தில் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வருகிறது மக்கள் தொகை குறைந்திருக்கிறதாவளர்ந்திருக்கிறதா? சென்னை நகரத்தைப் பொறுத்தவரையில்மதுரையைப் பொறுத்தவரையில்திருச்சியைப் பொறுத்தவரையில்கிராமங்களிலிருந்து மக்கள் சாரை சாரையாக நகரங்களுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். கிராமங்களில் எவ்வளவு முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று எடுத்துச் சொன்னாலும், அங்கிருந்து வாழ்க்கை நடத்துவதற்கு இயலாத காரணத்தினால் நகரங்களை நோக்கி இன்று படையெடுப்பு நடப்பது இன்னும் குறைந்ததாகத் தெரியவில்லை

ஓடிப்போன மாட்டை எங்கே தேடுவது?

இந்த நிதிநிலை அறிக்கையில் 100க்கு 70 பங்கு மக்கள் விவசாயத்தை நம்பி வாழக்ககூடியவர்கள் என்ற சொல்லப் பட்டிருக்கிறது ஏகாதசிக்கு முந்திய இரவிலே தான் நாம் இருக்கிறோம் என்ற பொருள்தானே அல்லாதுநன்றாக இருக்கிறோம். துவாதிசியில் இருக்கிறோம்என்ற பொருளல்ல. துவாதரி என்றால் நன்றாகச் சாப்பிடக் கூடிய நிலையில் இல்லை. அவர்கள் உண்மையிலேயே இந்த விவசாயத்தில் கிடைத்த வருவாய் எங்கே போயிற்று என்று தேடிப் பார்த்தார்களா? விவசாயத்தில் மட்டுமல்ல, தொழில் துறையில் கிடைத்த வருவாய், பல தேக்கங்கள் ஏற்பட்டுப் புதிய செல்வ வளர்ச்சியால் ஏற்பட்ட வருவாய். இவை அத்தனையும் எங்கே போயின என்று தேடிப் பார்ப்பதற்குப் பண்டித நேரு அவர்கள் ஒரு குழுவை அமைத்திருக்கிறார். அந்தக் குழு பணியாற்றிக் கொண்டு வருகிறது என்று கருதுகிறேன். ஓடிப்போன மாட்டை எங்கே தேடிக் கண்டுபிடிப்பது? உடைந்த பூட்டை மறுபடியும் எப்படிச் சரிப்படுத்துவது, கொள்ளை போன பணத்தை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற திகைப்பு இருக்கிறது. இருந்தாலும் இதுபோன வழி என்று வழியையாவது காட்டினால் அந்த வழியையாவது அடைக்கலாம்.

போன பணம் போய்விட்டது. நான் தேர்தல் விஷயமாகச் சொல்கிறேன் என்று நிதியமைச்சர் அவர்கள் தவறுதலாகக் கருத வேண்டாம். பிரிட்டீஷ் பேரரசி இங்கு வந்திருந்தபொழுது நாமும் அவர்களை வரவேற்றோம். ராஜஸ்தான் மாஜி மன்னர்களும் வரவேற்றார்கள். எவ்வளவு கோலாகலமாக அவரை வரவேற்க முடிந்தது? எங்கிருந்து அவர்களுக்கு இதற்குப் பணம் கிடைக்கிறது? நீங்கள் இதற்கு அதிகப்பணம் செலவழித்தால் கேள்வி கேட்பதற்கு நாங்கள் இருக்கிறோம். ஆகவே நீங்கள் அளவாகத்தான் செலவழிக்க முடியும். எதற்கு எவ்வளவு செலவழிக்கலாம் என்ற அளவும் உங்களுக்குத் தெரியும். ஆனால் மன்னர்களும் மாஜி மன்னர்களும் ராஜஸ்தானில் பிரிட்டீஷ் பேரரசியை கோலாகலமாக வரவேற்பதற்குச் செலவழித்த பணம் எங்கிருந்து வந்தது? பண்டித நேரு அவர்கள் கண்டுபிடிக்க வேண்டிய பணத்தில் ஒரு பகுதி அந்தப் பணத்தில் முடங்கியிருக்கிறது. இப்படிப் பணம் தவறான முறையி்ல் போய் நடுக்கொள்ளைக்காரர்களிடத்தில் சிக்கி இருக்கிறது. இதற்கு நமக்குக் கணக்குத் தெரியவில்லை

அந்தப் பணம் கொள்ளைக்காரர்களிடம்

ஒரு பஸ் முதலாளி 5 ஆண்டுகளில் 10 பஸ்களக்குச் சொந்தக்காரராகி அங்கே ஒரு சினிமா கொட்டகையையும் விலைக்கு வாங்குவததைப் பார்க்கலாம். இந்த நாட்டில் லஞ்ச லாவண்யத்திற்கு வித்து விதைக்கிறவர்கள் பஸ் முதலாளிகளைத் தவிர வேறு யார்? என்ன விலையாக இருந்தாலும் சரி, ஆனால் அமைச்சர்களுக்குத் தரத்தக்க விலை கட்சித் தொண்டுதான். ஆகையால் அமைச்சர்கள் வரை வருவதில்லை. மற்றவர்கள் யாருக்கும் லஞ்ச லாவண்யத்தைக் கொடுக்க முன் வருகிறார்கள். இதைக் கண்டுபிடித்துச் சொல்ல முடியாதா? என்று உள்துறை அமைச்சர் இருந்தால் இப்பொழுது கேட்கக் கூடும். போலீசை வைத்துக் கொண்டு, போலீஸ் நாய்களைப் பிடித்துக் கூடச் சில திருட்டுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியிருக்கும் பொழுது எங்களால் என்ன முடியும்? கேள்விப்படுவதைச் சொல்ல முடியும். அதை வைத்துக் கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும். பஸ் முதலாளிகள் 10 ஆண்டுகளில் எவ்வளவு செல்வான்களாக ஆகியிருக்கிறார்கள்? நேரடியாக மக்களுக்கு வந்திருக்க வேண்டிய பணம், பண்டாரத்திற்கு வந்திருக்க வேண்டிய பணம்பண்டாரம் என்று சொன்னால் அமைச்சர் கேலியாகச் சொல்கிறேன் என்று கருத வேண்டாம். பண்டாரம் என்றால் கொட்டி வைத்திருக்கும் ஒரு இடம்பண்டாரத்திற்கு வரவில்லை. நடுக்கொள்ளைக் காரர்களிடத்தில் அந்தப் பணம் தங்கிவிட்டிருக்கிறது.

ஆகையினால் ஏதாவது வழிவகை உங்களுக்குத் தெரியுமா என்று எங்களைக் கேட்டால் தெளிவாகச் சொல்வோம். வருவாய் தரக்கூடிய தொழில்களைச் சர்க்கார் தங்கள் உடமையாக்கி கொண்டிருக்க வேண்டும்

கலப்படப் பொருளாதாரம்

இன்றைய தினம் எல்லாப் பொருளாதாரக் குழப்பங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உங்கள் !மிக்ஸட் எகனாமி) கலப்படப் பொருளாதாரத் திட்டம்தான் காரணம் என்பதை நான் முன்பும் சொல்லியிருக்கிறேன், இன்றைக்கும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். கலப்படப் பொருளாதாரத்தை வைத்துக் கொண்டு இருப்பதால் நம்மால் எந்தக் காரியத்தையும் வெற்றிகரமாகச் செய்ய முடியவில்லை. விலைவாசிகளைக் கட்டுப்பாடு செய்ய முடியவில்லை. விலைவாசிகளைக் கட்டுப்பாடு செய்ய முடியவில்லை என்பதற்கு என்னைக் காரணம் கேட்டால் என்னைப் பொறுத்தவரை இதைக்கூடச் சொல்வேன்முதல் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களிலே செய் பொருள்களைமான்யு பாக்சர்ட் குட்ஸ்அந்தப் பொருள்களைவிட கன்ச்யூமர் குட்ஸ்உபயோகிக்கும் பண்டங்களை அதிகப்படுத்தியிருந்தால் நமக்கு இந்த அளவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்க முடியாது என்று கருதுகிறேன். இதையே ரஷ்யாவில் முதல் திட்டத்திற்கம் இரண்டாவது திட்டத்திற்கும் இடையே இந்த மாறுபாட்டைக் கண்டுகொண்டு கன்ச்யூமர் குட்ஸை அதிகப்படுத்தினார்கள் என்று புத்தகத்தில் படித்திருக்கிறேன். ஆகையினால் முதலிலே கன்ச்யூமர் குட்ஸை அதிகப்படுத்தி உற்பத்தி செய்து கொள்ளவில்லை. உணவுப் பொருள்களைக் கூட வெளிநாடுகளிலிருந்து... 

துணைத் தலைவர்: The Hon. Member has taken more time. He has already taken nearly one hour. Whereas 45 minutes has been allotted to him. 

அண்ணா: இன்னும் சில வினாடிகள். ஆகவே உணவுப் பொருள்கையும் உபயோகிக்கும் பொருள்களையும் முதல் இரண்டு திட்டங்களில் உண்டாக்காததுதான் மிகுந்த குறைபாடு

தலைக்கு எவ்வளவு என்ற கணக்கு

பொதுவாக இந்த ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலமாக விவசாயத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி நடுக் கொள்ளைக்காரர்களுக்குப் போய்விட்டது என்று சொல்வதுபோல், தொழில் துறையிலும் முன்னேறி இருக்கிறோமா? இல்லையே என்று எடுத்துச் சொல்லும்போதுஇல்லை இல்லைஎல்லா இடத்திலும் முன்னேறி இருக்கிறோம் என்று அமைச்சர்கள் பேசுகிறார்கள். அதுவும் தொழில் அமைச்சரவர்கள் மிகச் சுறுசுறுப்பாக இந்த வாதத்தில் புள்ளி விவரங்களை எடுத்துக்காட்டிப் பேசுகிறார்கள். மேற்கு வங்கத்தைப் பாருங்கள்பம்பாயைப் பாருங்கள்உத்திரப்பேரிதேசத்தைப் பாருங்கள் என்று சொன்னதாகப் பத்திரிகையில் படித்தேன் நான் அறிய விரும்புவது டோடல் எகனாமிக் பிக்சர்எத்தனைக் கம்பெனிகள் புதிதாகத் துவக்கப்பட்டன. அவைகளுக்கு எவ்வளவு மூலதனம் போடப்பட்டது. நான்கு ஆண்டில் மூன்று ஆண்டில் எவ்வளவு என்ற கணக்கல்ல மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கணக்கிடும் நேரத்தில் தலைக்கு வருமானம் எவ்வளவு என்ற கணக்கு. அதைப் பார்க்கும் போது நம் மாநிலம் மற்ற மாநிலங்களை விட அடித் தட்டிலேயே இருக்கிறது என்பதை எந்தப் பொருளாதார நிபுணர் மறுத்துக் கூறுகிறார். எந்தப் பொருளாதார நிபுணர் இல்லை என்று சொல்லிவிட முடியும்? உண்மையிலேயே நம் பகுதி பின்தங்கியிருக்கிறது என்பதை யாரும் உணர முடியும்

நாடு பின்தங்கி இருக்கிறது

அண்மையில் மாநிலக் கவர்னர்கள் மாநாட்டில் தென்னத்திலிருந்து சென்றிருந்த மாநிலக் கவர்னர்கள் எல்லாம் அது பிற்படுத்தப்பட்டிருக்கிறது என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். பெரிய பொருளாதார நிபுணர்கள் அரசியல் விற்பன்னர்கள் அமைச்சர்களும்கூட இந்த நாட்டுக் குடிமக்கள் என்ற கவனம் வரும் காலத்தில் அவர்களும்கூட இந்த நாடு பின்தங்கியிருக்கிறது, அடிப்படைத் தொழிலைப் பொறுத்தவரை பின்தங்கியிருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நாங்கள் பேசுகிறபோது வெட்டிய கிணறுகளைப் பாருங்கள், கட்டிய பள்ளிக் கூடங்களைக் கணக்கெடுங்கள், பகல் உணவு அளிக்கிறோம் வந்து சாப்பிட்டுப் பாருங்கள் என்றார்கள். புதுப்புது ரோடுகள் போட்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள். இவைகளெல்லாம் ஒரு நாட்டின் முற்போக்கா? இவைகளெல்லாம் ஒரு நாட்டின் முற்போக்கா? இவைகளெல்லாம் ஒரு நாட்டின் பொருளாதாரப் பெருக்கத்திற்கு ஏற்ற வசதிகள், வாய்ப்புகளா? ரோடுகள் எதற்கு? பட்டினி கிடக்கும் மக்கள் நடந்து போகவா? மூன்று வேளை வயிறார சாப்பிட்டு அழகாகச் சிந்தபாடிக் கொண்டு நடந்து செல்வதற்காக வெள்ளைக்காரன் அந்த நாளில் தன் பட்டாளம் நடக்கப்பாதை போட்டதுபோல, கம்யூனிடி டெவலப்மெண்ட் ஜீப்புகள் ஓட ரோடுகள் போடுகிறார்கள். ஆகையினால் ஒரு நாட்டின் முன்னேற்றம் எதில் இருக்கிறது என்பது ஒன்றை மட்டும் எடுத்துச் சொல்லி என்னுடைய பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று கருதுகிறேன்

வெட்கப்படுகிறார்களா? வேதனைப்படுகிறார்களா?

நமக்கு விவசாயத் துறையில் கிடைத்திருக்கம் வருமானத்தைக் கணக்குக் கொடுத்திருக்கிறார்கள், சர்க்கார் துறையினர். இரண்டாவது திட்டத்தை எடுத்துக் கொண்டால் ஆந்திராவில் 471 கோடியும், பீகாரில் 564 கோடியும், பம்பாயில் 518 கோடியும், மத்தியப்பிரதேசத்தில் 565 கோடியும், சென்னையில் 345 கோடியும், பஞ்சாபில் 488 கோடியும் உத்திரப்பிரதேசத்தில் 1,146 கோடியும், கிடைத்திருக்கிறது என்று கணக்குக் கொடுத்திருக்கிறார்கள். நம்நாடு முக்கிய விவசாய நாடு. பம்பாய் தொழில் வளம் மிகுந்த நாடு. இருந்தும் விவசாயத்தில் அவர்களுக்கு 518 கோடி நமக்கு 345 கோடி வருவாய் வந்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். இப்படிக் கிடைத்திருப்பதைப் பார்த்து அமைச்சர்கள் பெருமைப்படுகிறார்களா? அல்லது வெட்கப்படுகிறார்களா? வெட்கப்படுகிறார்கள் என்றால் அதைத் திருத்த வழி என்ன காண்கிறார்கள் என்று அறிய விரும்புகிறேன்.

விவசாயத்தைப் போலவே தொழில் துறையின் மூலம் கிடைத்திருக்கும் வருவாய் பம்பாயில் 272 கோடி சென்னைக்கு 66 கோடி மேற்கு வங்கத்திற்கு 197 கோடி என்று குறிப்பிட்டிருக்கிறது. மற்றும் ஒன்ற, வரவரத் தொழில்கள் ஏற்படுகின்றன. சர்க்கார் நடத்தும் தொழில்களில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட கம்பெனிகள் போக்குவரத்துக் கம்பெனிகள் இவைகளிலெல்லாம் ஏற்பட்டிருக்கும் வருவாயைக் கணக்கிட்டால் அது ஆந்திராவில் 667 கோடி, பம்பாயில் 411 கோடி, சென்னையில் 208 கோடி, உத்திரப்பிரதேசத்தில் 316 கோடி இருப்பதாகச் சொல்கிறார்கள். தனி நபர் வருமானத்தை எடுத்துக் கொண்டால் ஆந்திராவில் 266.1, அஸ்ஸாமில் 323.5, பம்பாயில் 313.2. மத்தியபிரதேசத்தில் 318.8, சென்னையில் 269.3 கோடி, பஞ்சாபில் 406 கோடி, மேற்கு வங்கத்தில் 398.4 என்று இந்தக் கணக்கைக் கொடு்த்திருக்கிறது

எதை வைத்துக் கணக்கிடுவது?

எதை வேண்டுமானாலும் கணக்கெடுத்துக் கொண்டாலும் இந்த நாடு வளர்ந்திருக்கிறது என்று எதை வைத்துக் கொண்டு எங்களை நம்பச் சொல்கிறார்கள் என்று கேட்கும் நேரத்தில் உண்மையிலே எதை வைத்துக் கொண்டு இந்த நாடு முன்னேறியிருக்கிறது என்று கேட்கும் போது ஒரு நாடு முன்னேறியிருக்கிறது என்பதற்கு ஒரு நிபுணர் எடுத்துக் காட்டியிருக்கும் ஒரு கருத்தை மட்டும் எடுத்துச் சொல்லி என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன்.

The question is being asked which is a backward area, and what is the index of backwardness? For example when I mentioned that backward area should be given due consideration, so that there may be greater development in these areas it was pointed out that so far as Madras is concerned, it has made greater progress than many of the other States in the educational field. The pace of rural electrification is more than in any other State. Road transport system is about the best in India. It is therefore asked how can it be said that Madras State is a backward area?... 

Therefore, the proper index to assess the backwardness or otherwise of a region should be the per capita income of that region. The per capita income of a region gives a clear indication of the economic development which has take place in that region. Simply because that are more roads and more educated persons in a particular region, that does not mean that there is greater economic prosperity in that region. The backwardness or the progressive nature of an area should not be judged from the percentage of school going children or from the extent of the roads available. All that will not be the proper indication. The entire economic like of the community should be taken into consideration. 

இதுதான் ஆதாரம் என்று சொல்லும் ஒரு நிபுணருடைய வாக்கியங்களை இந்த மன்றத்திலே கூறினேன். இந்த சட்டமன்றம் அதை ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறேன். ஏனென்றால், அந்த நிபுணர் நம் நிதியமைச்சர்தான் !பலத்த சிரிப்பு) என்று சொல்லிக் கொண்டு என்னுடைய உரையை இந்த அளவில் முடித்துக் கொள்கிறேன்

(நம்நாடு - 15.3.61)

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

மஹாலக்ஷ்மி யாருக்கு என்ன அருளுவாள் ?

 

நல்வழி வெண்பா: 21


“நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும்ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்.”

விளக்கம்:
பிறருக்கு துன்பம் செய்யாதவருக்கு, அடுத்தவர் அழிய வேண்டும் என்ற வஞ்சனை இல்லாதவருக்கு, நல்ல நீர்வளம், நிழல் தரும் மரங்கள், நெல் வளம், பேரும், புகழும், சிறப்பான வாழ்க்கையும், நல்ல வீடும், தேவையான செல்வமும், நீண்ட ஆயுளும் செந்தாமரையில் அமரும் மஹாலக்ஷ்மி அருளுவாள்.


ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?