google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: இன்பம்

சனி, 9 நவம்பர், 2019

இன்பம்


பழந்தமிழ் கற்றல் இன்பம்
பலநாடு சுற்றல் இன்பம்
எழுந்திடு புதுமை தன்னை
ஏற்றிடல் வாழ்வுக் கின்பம்
குழந்தையின் தளிர்க்கை பட்ட
கூழினை உண்டல் இன்பம்
இழந்ததைப் பெறுதல் இன்பம்
இசைபட வாழ்தல் இன்பம்!

கற்றவர் முன்தாம் கற்ற
கல்வியைக் கூறல் இன்பம்.
வெற்றியை வாழ்வில் சேர்க்கும்
வினைபல புரிதல் இன்பம்
சிற்றினக் கயவ ரோடு
சேராது வாழ்தல் இன்பம்
பெற்றதை வழங்கி வாழும்
பெருங்குணம் பெறுதல் இன்பம்!
-சுரதா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?