google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: வாஸ்து நாள் என்றால் என்ன?

புதன், 15 மே, 2019

வாஸ்து நாள் என்றால் என்ன?



வாஸ்து புருஷன் உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் தினத்தை வாஸ்து நாள் என்று அழைக்கிறார்கள். முதலில் இந்த வாஸ்து புருஷன் என்பவன் யார் என்பதைத் தெரிந்துகொள்வோம். சிவபுராணத்தின்படி, சிவபெருமான் அந்தகாசுரனை சம்ஹாரம் செய்யும் காலத்தே அவருடைய வியர்வைத் துளியில் இருந்து உருவான குட்டி பூதமே இந்த வாஸ்து புருஷன் என்று சொல்வார்கள்.

இந்த குட்டி பூதமானது சதா பூமிக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் என்றும் வருடத்திற்கு எட்டு நாட்கள் மட்டும் உறக்கத்தில் இருந்து எழுவார் என்றும் கணக்கிட்டு வைத்துள்ளார்கள். சித்திரை 10, வைகாசி 21, ஆடி 11, ஆவணி 6, ஐப்பசி 11, கார்த்திகை 8, தை 12, மாசி 22 என இந்த எட்டு நாட்களில் வாஸ்து புருஷன் நித்திரையிலிருந்து எழுவார் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருப்பர்.

இந்த நாட்கள் எந்த வருடத்திலும் மாறவே மாறாது. இந்த எட்டு நாட்களில்கூட குறிப்பிட்ட நேரத்தில்தான் கண்விழிப்பார் என்றும் அதுவும் மூன்றேமுக்கால் நாழிகை, அதாவது ஒன்றரை மணிநேரம் மட்டுமே கண் விழித்திருப்பார் என்றும் சொல்வார்கள். இந்த ஒன்றரை மணி நேரத்தையும் தந்தாபனம், ஸ்நானம், பூஜை, போஜனம், தாம்பூலம், சயனம் என்று 15 நிமிடங்கள் வீதம் ஆறு பாகங்களாகப் பிரித்திருப்பர்.

பொதுவாக வீடு கட்டுவதற்கு முதல் முக்கால் மணி நேரம் கழித்து, அடுத்து வரும் போஜனம், தாம்பூலம் என்று வருகின்ற குறிப்பிட்ட அரை மணிநேரத்தை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். அந்த அரை மணி நேரத்திற்குள் பூமிபூஜை செய்து வீடு கட்டத் துவங்கினால் எந்தவிதத் தடையுமின்றி வீடு கட்டி முடிக்கப்படுவதோடு, அந்த வீட்டில் எல்லா விதமான வளங்களும் நிறைந்திருக்கும் என்பது நமது நம்பிக்கை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?