google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஜூலை 2018

வெள்ளி, 20 ஜூலை, 2018

நான்கு பண்புகள்

ஆண்களுக்குரிய நாற்பண்புகள்
1. அறிவு: எந்தப் பொருளானாலும் அந்தப்பொருளிடத்திலே அமைந்து அதன் உண்மைத் தன்மையை உணர்வது அறிவு ஆகும்.
2. நிறை: நிறை என்பது தன்னிடம் காக்க வேண்டியனவற்றைக் காத்துப் போக்க வேண்டியவற்றைப் போக்கி நடக்கும் நடத்தை ஆகும்.
3. ஓர்ப்பு: ஓர்ப்பு என்பது ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல் ஆகும்.
4. கடைப்பிடி: கடைப்பிடி என்பது கொண்ட பொருள் மறவாமை ஆகும். அதாவதுநன்றென அறிந்த பொருளை மறவாமை

பெண்களுக்குரிய நாற்பண்புகள்
1. அச்சம்: வரவிருக்கும் ஆபத்து மற்றும் அவப்பெயர் குறித்து ஏற்படும் மன நடுக்கம் அச்சம் எனப் பொருள்படும்.
2. மடம்: இது மடமை எனவும் கூறப்படும். அறிந்தவொரு செய்தியைக்கூட அறியாதவர் போல சபையில் எடுத்துக்கூறாதத் தன்மை.
3. நாணம்: வெட்கப்படுவது.
4. பயிர்ப்பு: கணவனைத் தவிர வேறு ஆணின் உடல்  தன் மீது பட்டால் ஏற்படும் கூச்ச உணர்வு.

வியாழன், 19 ஜூலை, 2018

நமச்சிவாயத்தை நான் மறவேனே!


பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
      
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
      
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
      
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
      
நமச்சி வாயத்தை நான்மற வேனே!

                              -இராமலிங்க அடிகளார்


தன்னைப் பெற்ற தாயை குழந்தையானது மறந்தாலும், தான் பெற்ற பிள்ளையை  தாயே மறந்தாலும்,  தான் நின்று இயங்குதற்கு அமைந்த தேகத்தை யிர் மறந்தாலும்,  தன்னை இயக்குகின்ற உயிரின் தன்மையை உடல் மறந்தாலும்  தன்னை நன்கு கற்று நெஞ்சில் நிலைபெறக் கொள்ளும் கலையுணர்வு அந்த நெஞ்சை மறந்தாலும், ண் பார்வைக்குக் காவலாய் அமைந்து மேலும் கீழும் சென்று இமைக்கும் இமைகளைக் கண்கள் மறந்தாலும்நல்ல தவத்தர்களான சான்றோர் திருவுள்ளத்திலிருந்து ஓங்கும் நமச்சிவாயம் என்ற திருப்பெயரை நான்  மறக்க மாட்டேன்.

For posts on various interesting information https://tamiltip.blogspot.com/

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...