செய்யுள் வடிவில்
உள்ள
சங்க காலத்து விடுகதை
மரமது
மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து
மரமது
மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக்
குத்தி,
மரமது
வழியே சென்று, வளமனைக் கேகும்
போது
மரமது
கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்
_சுந்தரகவிராயர்
மரம் என்ற சொல் மீண்டும்
மீண்டும் வந்து வெவ்வேறு பொருள் தரும்படி பாடல்
அமைக்கப்பட்டுள்ளது.
பாடல் விளக்கம்
அரசன்
ஒருவன், தன் தோளிலே வேலை
ஏந்தி, குதிரையில் ஏறி, வேட்டைக்குச் சென்றான்.
அங்கு ஒரு வேங்கைப்புலியைக் கண்டு,
தன் வேலால் குத்திக்கொன்றான். பின்னர்
அரசன் தனது அரண்மனைக்குச் சென்றான்.
புலியைக் கொன்று வெற்றிவீரனாகத் திரும்பிவரும்
அரசனைக் கண்ட பெண்கள் அரசனுக்கு
ஆலத்தி (ஆரத்தி) எடுத்து வரவேற்றனர்.
பொருள் விளக்கம்
மரமது - அரச மரம் (அரசு)
- அரசு என்பது அரசன்.
மரத்திலேறி - மா மரம் = மா
என்பது குதிரை.
மரமதைத் தோளில்
வைத்து
- வேல மரம் (வேல்).
(அரசன்
குதிரையிலேறி, வேலைத் தோளில் வைத்துச்
செல்கின்றான். அப்போது)
மரமது - அரசன்
மரத்தைக் கண்டு
- வேங்கை மரம் - வேங்கை என்பது
வேங்கைப் புலி.
மரத்தினால் - வேல்
மரத்தைக் குத்தி
- வேங்கைப் புலியைக் குத்தி
(அரசன்
வேலினால் புலியைக் குத்துகின்றான். பின்னர்)
மரமது - அரசன்
வளமனைக்கேகும்போது - வீடு நோக்கிச் செல்லும்போது
மரமது கண்ட மாதர்
- அரசனைக் கண்ட பெண்கள்
மரமுடன் - ஆல் மரம்
மரமெடுத்தார் - அத்தி மரம்
ஆல்
+ அத்தி = ஆலத்தி
அரசனைக்
கண்ட பெண்கள் ஆலத்தி எடுத்தார்.