google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஜூலை 2019

சனி, 27 ஜூலை, 2019

உணவெனப்படுவது நிலத்தொடு நீரே!


உழவுத்தொழிலுக்கு அடிப்படைத் தேவை நீர்.

உழவுத் தொழிலைப் போற்ற நினைக்கும் மன்னன் நீர் நிலைகளை முதலில் பெருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் குடபுலவியனார். பசியும், பகையும் இன்றி மக்கள் வாழும் நாடே சிறந்த நாடாகக் கொள்ளப்படும், பசியும், பிணியும் பகையுமின்றி மக்கள் வாழவேண்டுமானால் உணவுப் பற்றாக்குறை இருக்கக்  கூடாது. நீரில்லாமல் இருக்கும் நிலத்தால் பயன் இல்லை. எனவே, நீர் நிறைந்து நிறையக் கிடைக்குமாறு நீர்நிலை பலவற்றை ஆங்காங்கே ஆக்கித்தருதல் வேந்தனுடைய தலையாய கடமை. இம்மண்ணுலகில் நிலைத்த புகழை விரும்புவோர், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து அதற்கு வேண்டுவன செய்வோரே என்ற கருத்தை,

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தேரேஉண்டி முதற்றே உணவின் பிண்டம், உணவெனப்படுவது நிலத்தொடு நீரே, நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே”— (புறநானூறு)


எவன்  நிலத்தையும் நீரையும் ஒன்றாகச் சேர்த்துக் காப்பாற்றுகிறானோ  அவனே இவ்வுலகத்தின் உடலையும் உயிரையும் ஒன்றாய் இணைத்தவன் ஆகிறான். என்று குடபுலவியனார், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு அறிவுறுத்துகிறார். இது எல்லாக் காலங்களிலும் எல்லா அரசுகளுக்கும் பொருந்தும் அறிவுரையாகும்.

நீர் மேலாண்மையில் நாம் பின்தங்கியுள்ளோம். 

நீரைத் தேக்கி வறட்சியைப் போக்க அரசும் மக்களும்  பாடுபட வேண்டும்.


கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...