google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஏப்ரல் 2018

சனி, 14 ஏப்ரல், 2018

பல் சான்றீரே! பல் சான்றீரே!


பாடல் பின்னணிமுதியோராக இருந்தும் தம் அறிவையும் ஆற்றலையும் நல்ல வழியில் பயன்படுத்தாத சிலரை நல்வழிப்படுத்த நரிவெரூஉத்தலையார் இவ்வாறு கூறுகின்றார்.
பல் சான்றீரே! பல் சான்றீரே!
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள்
பயன் இல் மூப்பின் பல் சான்றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ,
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான்
எல்லாரும் உவப்பது, அன்றியும்
நல் ஆற்றுப்படூஉம்  நெறியுமார் அதுவே.
பொருளுரை:   பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே!  பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே!   கெண்டை மீனின் முள் போன்ற நரை முடியுடனும், முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கம் கொண்ட கன்னத்துடனும்,  பயன் இல்லாத முதுமையை அடைந்த பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே!   கூர்மையான கோடரிப்  படைக்கலன் கொண்டு மிகுதியான வலிமை கொண்ட காலன் கயிற்றால் பிணைத்து இழுத்துச் செல்லும் நேரத்தில் நீங்கள் வருந்துவீர்கள்.   நல்ல செயல்களைச் செய்யாவிட்டாலும், தீய செயல்கள் செய்வதைத் தவிர்க்கவும்.   அது தான் எல்லாருக்கும் மகிழ்ச்சி அளிப்பது.   அதுமட்டுமல்லாமல், அதுதான் உங்களை நல்ல வழியில் செலுத்தும்.
புறநானூறு 195, பாடியவர் –  நரிவெரூஉத்தலையார்திணை பொதுவியல்துறை பொருண்மொழிக் காஞ்சி

ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?