google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil

புதன், 4 ஜனவரி, 2023

இலவச ஜாதக பரிவர்த்தனை விழா அழைப்பிதழ்





முகநூலில் பார்த்த அழைப்பிதழில் உள்ள விபரம்:


ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நமஹ

மீண்டும் சுயம்வரம்

29ம் நிகழ்வு

விஸ்வகர்மா சுயம்வர சங்கமம் 
பொன்னமராவதி, புதுக்கோட்டை மாவட்டம்

இலவச ஜாதக பரிவர்த்தனை விழா அழைப்பிதழ்

அன்பார்ந்த விஸ்வகர்மா இரத்த சொந்தங்களே. வணக்கம்! பொன்னமராவதியில் கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்படும் சுயம்வரம் நிகழ்ச்சியில் பங்கேற்று பலன் பெற்றோர் ஏராளம்.

(முற்றிலும் இலவசம்)

நாள்: 08.01.2023, ஞாயிற்றுக்கிழமை

(மார்கழி மாதம் 24-ம் தேதி

நேரம்: காலை 9.00 மணிமுதல் மாலை 3.00 மணிவரை

இடம்: அண்ணாமலை திருமண மண்டபம், பொன்னமராவதி

நிகழ்வில் கலந்துகொள்வோர் தங்கள் மணமகன் அல்லது மணமகள் ஆகியோரின்

1. ஜாதக நகல் - 2

2. போஸ்ட் கார்டு சைஸ் போட்டோ - 1

அவசியம் கொண்டு வரவும்.

மண்டப வாசலில் முன்பதிவு செய்யப்படும்.

மண்டபத்தின் நுழைவு வாயிலில் ஜாதகங்களை பதிவு செய்து கொண்டு உரிய அடையாள அட்டை எண் பெற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட நேரப்படி நிகழ்வு தொடங்கும். கால தாமதத்தைத் தவிர்க்கவும். விஸ்வமர்மா சொந்தங்களே வாருங்கள்!

உங்களுக்கான சுயம்வரத்தில் பங்குபெற்று பலன் பெறுங்கள் !!

தொடர்புக்கு:

98420 95742, 94432 79088,

99407 59731, 96269 01739

75983 61300

இவண் :

விஸ்வகர்மா சுயம்வர சங்கமம்

பொன்னமராவதி 

அவசியம் முகக்கவசம் அணிந்து வரவும்.

குறிப்பு : திருமணம் நிச்சயம் ஆனதும் எங்களுக்கு தகவல் தரவேண்டுகிறோம்.

பூவை கண்மணி பிரிண்டர்ஸ், பொன்னமராவதி. செல் : 94434 89293

செவ்வாய், 3 ஜனவரி, 2023

காவிரி ஆறு

காவிரி ஆறு தமிழ்நாட்டில் அனைத்து மக்களால் போற்றப்பட்டு வணங்கப்படுகிறது; கங்கையைப் போன்றே புனிதமானதாக பாடப்பெற்று  தமிழ் இலக்கியங்களில் வெகுவாகப் புகழப்படுகிறது. இது பொன்னி, காவேரி கின்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

காவிரி தற்போதைய கர்நாடாக மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சித் தொடரில் பிரம்மகிரி என்ற மலைப் பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் உற்பத்தியாகின்றது. இந்த இடம் கடல் மட்டத்திற்கு மேல் 1340 மீட்டர் உயரத்தில் உள்ளது.

சிறு அருவியாக உற்பத்தியாகி மலைச்சரிவுகளில் குதித்து, பாறைகளின் நடுவே கீழிறங்கி பின் பாகமண்டலா என்ற இடத்தில் மன்னிகா என்ற சிற்றருவியுடன் சேர்ந்து சிறு ஆறாக குடகு மாவட்டத்தில் 80 கி.மீ. வரை பாய்கிறது. இந்த சிற்றாறின் படுகைகளில் கூழாங்கற்களும், மணற்துகள்களும் காணப்படுகின்றன.

பின் மைசூர் மாவட்டத்தில் புகுமுன் ஹேரங்கி என்ற துணை நதியுடன் சேருகிறது. கிழக்கு முகமாகப் பாய்ந்து வரும் காவேரியின் குறுக்கே கிருஷ்ண ராஜசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இவ்வணையை அடுத்து இடது புறம் ஹேமாவதி மற்றும் வலதுபுறம் லக்ஷ்மணதீர்த்தா என்ற இரு துணை நதிகள் காவிரியுடன் சேர்கின்றன.

பின் சீரங்கப்பட்டிணத்தை அடைந்து தென்கிழக்கில் திரும்பிப் பாய்ந்துவரும் போது நர்சிபூர் என்னும் இடத்தில் கபினி துணை ஆறு காவிரியின் வலது பக்கத்தில் சேருகிறது.

கபினி கேரள மாநிலத்தில் மரங்கள் அடர்ந்த மழை அதிகமாகப் பெய்யும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி நீர்வளம் மிக்க ஆறாக கர்நாடக மாநிலத்தில் புகுந்து காவிரியில் கலக்கிறது.

பின் சுவர்ணவதி, குண்டால் ஆகிய சிற்றாறுகள் காவிரியின் வலதுபுறமும் சிம்ஷா என்ற சிற்றாறு இடது புறமும் சேர காவேரியில் நீர்ப்போக்கு அதிகமாகிறது. எனினும் நிலச்சரிவு அவ்வளவு அதிகமின்மையால் நீரின் வேகம் குறைந்தே காணப்படும். ஆற்றின் அகலம் 800-1000மீட்டர் அளவில் இருக்கும்.

பின் காவேரி ஆறு கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை அடைந்து சுகனசுக்கி, பாராசுக்கி என இரு பிரிவுகளாக பிரிந்து 90 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் நீர்வீழ்ச்சியாக அதிவேகத்துடன் குதித்து, பலவாறாகப் பிரிந்து பின் மீண்டும் ஒன்று சேர்ந்து காவிரி ஆறாக சிவசமுத்திரம் என்ற இடத்தை அடைகிறது.

இங்கு 1902ல் சிவசமுத்திரம் நீர் மின் நிலையம் கட்டப்பட்டது. இது ஆசியாவிலேயே முதலாவது நீர்மின்நிலையம் ஆகும். பின் காவிரியுடன் அர்க்காவதி என்ற உபநதி இடதுபுறம் கலக்கிறது.

பின் காவிரி மேடு பள்ளங்கள், பாறைப்பகுதிகளை கடந்து மேகதாது என்ற இடத்தை அடைகின்றது. மேகதாது என்பதற்கு ஆறானது ஆடுதாண்டும் அளவிற்குதான் அகலம் உள்ளது என்று கன்னடத்தில் பொருள் கூறப்படுகிறது.

இவ்விடம் கர்நாடாக மற்றும் தமிழ்நாட்டிற்கு எல்லையாக உள்ளது. இந்தப் பகுதியில் காவேரி மிகவேகமாகவும், இரு பக்கங்களிலும் உயரமான பாறைகளுக்கிடையே குறுகலான பாதையில் பாய்ந்தோடுகிறது. பின் ஒகேனக்கல் என்ற இடத்தை அடைகிறது.

ஒகேனக்கல் என்பதற்கு புகையைக் கக்கும் கல் என்று பொருள். அதாவது இவ்விடத்தில் நீர் வீழ்ச்சியாக விழுவதில், நீர்த்துளிகள் சிதறி மேலெழுந்து சூரிய வெளிச்சத்தை மறைத்து புகையுண்டானது போல் காட்சியளிப்பதால் புகையைக் கக்கும் கல் என்னும் பொருளில் ஒகேனக்கல் என்று இவ்விடம் அழைக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து நீர் வீழ்ச்சியில் குளித்து பரவசமடைகின்றனர்.

ஒகேனக்கல் என்ற இடத்தில் ஆறு கிழக்கிலிருந்து தெற்கு நோக்கித் திரும்பி மேட்டூரை அடைகிறது. இங்குதான் மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது.

பின் 45 கிலோமீட்டர் பாய்ந்து ஆறு கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளைத் தாண்டி சமவெளியை அடைகிறது. இங்கு பவானி என்ற துணை ஆறு காவேரியில் கலக்குகிறது. இதுவரை பாறைப் பாங்கான பகுதியில் பாய்ந்து வந்த காவேரி சமவெளியில் பாய்கிறது.

எனவே வேகம் குறைந்து தன்னுடன் தாங்கிய மண் துகள்களை படியவைக்கிறது. ஆற்றுப்படுகை மணலாகக் காணப்படுகிறது. ஆழத்தைக் குறைந்து, அகலத்தைப் பெருக்கிய காவிரியாற்றுடன் நொய்யல் மற்றும் அமராவதி துணை நதிகள் வலது புறமும், திருமணிமுத்தாறு இடது புறமும் சேர்கின்றன.

மேட்டூரிலிருந்து 185 கிமீ. பாய்ந்து அகண்ட காவிரியாக முக்கொம்பை அடைகிறது. முக்கொம்பு தலைக் காவிரியிலிருந்து 656 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முக்கொம்பில் வடக்கில் கொள்ளிடமாகவும் தெற்கில் காவிரியாகவும் பிரிந்து கிழக்கு நோக்கி பயணிக்கிறது. பின் 27 கிலோமீட்டர் தொலைவில் காவிரியின் குறுக்கே கல்லணை கட்டப்பட்டுள்ளது.

பின் கல்லணையிலிருந்து வெளியேறும் போது காவிரியாறு, வெண்ணாறு என்று இரு ஆறுகளாகி காவேரி டெல்டா என அழைக்கப்படும் காவிரிக் கழிமுகப் பகுதியில் பாய்கின்றன. இந்தப் பகுதியே தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் ஆகும்.

கல்லணையிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரையை எட்ட அங்கு தெற்கு வடக்காக 195 கிலோ மீட்டர் வரை வளர்ந்து ஒரு முக்கோண வடிவமாக உள்ள இக்கழி முகப் பகுதியை வளமாக்க காவேரியும், வெண்ணாறும் இயற்கையாகவே மேலும் பிரிந்து 36 கிளை நதிகளாகி இறுதியில் கடலில் கலக்கின்றன.





வெள்ளி, 30 டிசம்பர், 2022

இந்த மொழிபெயர்ப்புகளை யார் செய்தது?

English:

A wooden block of mass 5 kg is suspended from a string. A bullet of mass 20 g moving in a horizontal direction comes to rest in a block and the block (including the bullet) rises up to a height of 15 cm. Find the initial velocity of the bullet.

Tamil: (தமிழ்)

5 கிலோ எடையுள்ள ஒரு மரத் தொகுதி ஒரு சரத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிடைமட்ட திசையில் நகரும் 20 கிராம் நிறை கொண்ட ஒரு தோட்டா ஒரு தொகுதியில் ஓய்வெடுக்கிறது மற்றும் தொகுதி (புல்லட் உட்பட) 15 செமீ உயரம் வரை உயரும். புல்லட்டின் ஆரம்ப வேகத்தைக் கண்டறியவும்.

Hindi:

5 किग्रा का एक लकड़ी का गुटका एक डोरी से लटकाया गया है। क्षैतिज दिशा में चलती हुई 20 ग्राम की एक गोली गुटके में धँस कर ठहर जाती है तथा गुटका (गोली सहित) 15 सेमी ऊँचाई तक ऊपर उठ जाता है। गोली का प्रारम्भिक वेग ज्ञात कीजिए।

Telugu:

5 కిలోల ద్రవ్యరాశి ఉన్న ఒక చెక్క బ్లాక్ స్ట్రింగ్ నుండి సస్పెండ్ చేయబడింది. క్షితిజ సమాంతర దిశలో కదులుతున్న 20 గ్రా ద్రవ్యరాశి బుల్లెట్ ఒక బ్లాక్లో విశ్రాంతి తీసుకుంటుంది మరియు బ్లాక్ (బుల్లెట్తో సహా) 15 సెం.మీ ఎత్తు వరకు పెరుగుతుంది. బుల్లెట్ ప్రారంభ వేగాన్ని కనుగొనండి.

Malayalam:

5 കി.ഗ്രാം പിണ്ഡമുള്ള ഒരു മരം കൊണ്ടുള്ള ഒരു ചരടിൽ നിന്ന് തൂക്കിയിരിക്കുന്നു. തിരശ്ചീന ദിശയിൽ ചലിക്കുന്ന 20 ഗ്രാം പിണ്ഡമുള്ള ഒരു ബുള്ളറ്റ് ഒരു ബ്ലോക്കിൽ വിശ്രമിക്കുകയും ബ്ലോക്ക് (ബുള്ളറ്റ് ഉൾപ്പെടെ) 15 സെന്റിമീറ്റർ ഉയരത്തിൽ ഉയരുകയും ചെയ്യുന്നു. ബുള്ളറ്റിന്റെ പ്രാരംഭ വേഗത കണ്ടെത്തുക.

Kannada:

5 ಕೆಜಿ ದ್ರವ್ಯರಾಶಿಯ ಮರದ ಬ್ಲಾಕ್ ಅನ್ನು ಸ್ಟ್ರಿಂಗ್ನಿಂದ ಅಮಾನತುಗೊಳಿಸಲಾಗಿದೆ. ಸಮತಲ ದಿಕ್ಕಿನಲ್ಲಿ ಚಲಿಸುವ 20 ಗ್ರಾಂ ದ್ರವ್ಯರಾಶಿಯ ಬುಲೆಟ್ ಒಂದು ಬ್ಲಾಕ್ನಲ್ಲಿ ವಿಶ್ರಾಂತಿಗೆ ಬರುತ್ತದೆ ಮತ್ತು ಬ್ಲಾಕ್ (ಬುಲೆಟ್ ಸೇರಿದಂತೆ) 15 ಸೆಂ.ಮೀ ಎತ್ತರಕ್ಕೆ ಏರುತ್ತದೆ. ಬುಲೆಟ್ನ ಆರಂಭಿಕ ವೇಗವನ್ನು ಕಂಡುಹಿಡಿಯಿರಿ.

Malay:

Sebuah bongkah kayu berjisim 5 kg digantung pada seutas tali. Peluru berjisim 20 g bergerak ke arah mendatar berhenti di dalam bongkah dan bongkah itu (termasuk peluru) naik sehingga ketinggian 15 cm. Cari halaju awal peluru itu.

Portuguese:

Um bloco de madeira de massa 5 kg está suspenso por um fio. Uma bala de massa 20 g movendo-se na direção horizontal para em um bloco e o bloco (incluindo a bala) sobe até uma altura de 15 cm. Encontre a velocidade inicial da bala.

Arabic:

كتلة خشبية كتلتها 5 كجم معلقة بخيط. رصاصة كتلتها 20 جم تتحرك في اتجاه أفقي تستقر في كتلة وترتفع الكتلة (بما في ذلك الرصاصة) إلى ارتفاع 15 سم. أوجد السرعة الابتدائية للرصاصة.

Urdu:

ایک سٹرنگ سے 5 کلو گرام کا ایک لکڑی کا بلاک لٹکا ہوا ہے۔ بڑے پیمانے پر 20 جی کی گولی افقی سمت میں حرکت کرتی ہوئی ایک بلاک میں آرام کرتی ہے اور بلاک (بشمول گولی) 15 سینٹی میٹر کی اونچائی تک بڑھ جاتی ہے۔ گولی کی ابتدائی رفتار معلوم کریں۔

Russian:

На веревке подвешен деревянный брусок массой 5 ​​кг. Пуля массой 20 г, летящая в горизонтальном направлении, останавливается в блоке, и блок (включая пулю) поднимается на высоту 15 см. Найдите начальную скорость пули.

Chinese (Simplified):

5 kg 的木块悬挂在一根子上。 颗质 20 g 的子沿水平方向移,停在一个方中,方(包括子)上升到 15 cm 的高度。 求子的初速度。

Chinese (Traditional):

質量為 5 kg 的木塊懸掛在一根繩子上。 一顆質量為 20 g 的子彈沿水平方向移動,停在一個方塊中,方塊(包括子彈)上升到 15 cm 的高度。 求子彈的初速度。

French:

Un bloc de bois de masse 5 kg est suspendu à une ficelle. Une balle de masse 20 g se déplaçant dans une direction horizontale s'immobilise dans un bloc et le bloc (y compris la balle) s'élève jusqu'à une hauteur de 15 cm. Trouvez la vitesse initiale de la balle.




செவ்வாய், 20 டிசம்பர், 2022

தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ கண்ணே நீ ஆராரோ

மாசிப் பிறையோ நீ வைகாசி மாங்கனியோ

நேசப்பிறையோ நீ தெவிட்டாத செங்கரும்போ

எங்கள் குலம் மங்காமல் எதிர் குலத்தோர் ஏசாமல்

தங்கமலி பொக்கிஷத்தைத் தானாள வந்த கண்ணோ

தித்திக்கும் பாலோ என் தெவிட்டாத தெள்ளமுதோ

தித்திப்பின் உள்ளிருக்கும் செங்கரும்பே கண்வளராய். 






வெள்ளி, 9 டிசம்பர், 2022

ஃபேஸ்புக் உளறல்

குங்குமம் தயாரிப்பது எப்படி ?

மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழசாற்றில் 
ஊற வைத்து, பின் உலர வைத்து பொடிசெய்தால் குங்குமம் தயாராகும். 

புள்ளிகள் மற்றும் பூச்சிகள் தாக்குதல் இல்லாத எலுமிச்சை பழங்களைத் தேர்ந்தெடுக்க
வேண்டும். கொடி எலுமிச்சை மிகவும் நன்று. எலுமிச்சையை கீழிருந்து மேலாக நறுக்க வேண்டும். நறுக்கிய எலுமிச்சையிலிருந்து சாறு எடுத்து மஞ்சள் துண்டுகள் மூழ்குமாறு செய்ய வேண்டும். இதற்கு எவர்சில்வர் பாத்திரங்கள் உபயோகிக்க கூடாது. பித்தளை அல்லது மண் சட்டியை உபயோகிப்பது நல்லது. வெண்காரம் மற்றும் படிகாரம் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து, மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சைச் சாற்றில் சேர்க்க வேண்டும். நல்ல சிவப்பு நிறம் வேண்டுமானால் சிறிது அதிகமாக சேர்க்க வேண்டும். இந்தக் கலவையினை நிழலில் காய வைக்க வேண்டும். இதுவே குங்குமப் பொடி. 

குங்குமம் என்றாலே மங்களம் என்று பொருள். இவ்வாறு தயாரிக்கப்படும் குங்குமம் நெற்றியில் அணியப்படுகிறது. தலை வகிட்டு முனையிலும் பெண்கள் அணிகிறார்கள். நெற்றியில் 
புரவ மத்தியில் பொட்டு வைப்பதால் குறிப்பாக குங்குமம் இடுவதால் மங்கள பண்பு நிறைகிறது என்பது நம்பிக்கை. இது ஆன்மீக அடிப்படையும் இதுவாகும். நெற்றியில் குங்குமம் இடுவதால் மங்களம் நிறைகிறது. 

இதையே இனி அறிவியல் ரீதியில் பார்ப்போம். நெற்றியின் புருவ மத்திக்கு நேர் பின்னால் மூளையின் ஒரு பகுதியாக Pineal gland எனும் நெற்றிக் கண் சுரப்பி  அமைந்துள்ளது. இது மூளையின் ஒரு முக்கிய பகுதியென அறிவியலார் உணர்ந்து வருகிறார்கள். கண் போன்ற 
அமைப்பு எனக் கண்டறிந்துள்ளார்கள். இதனை நெற்றிக்கண் எனலாம். இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும். யோகப் பயிற்சியில் சுழுமுனை எனப்படுவுதும் இப்பகுதியாகும். தெய்வத்துடன் தொடர்பு கொள்ள உதவும் பகுதி இதுவாகும். யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்ச்சி (பிராணாயாமம்) செய்யும் போது நெற்றிக்கண் மீது கவனம் குவியும். ஞானக் கண் என்றும் அழைக்கப்படும். 

அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட இன்னொரு நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது. அன்றைய 
ஞானியர் யோகிகள் ஆகியோர் இதை உணர்ந்திருந்தார்கள். 
அதனாலையே நெற்றியில் பொட்டு வைத்தக் கொண்டனர்.  இன்று உள்ளது போன்ற அலங்கார ஒட்டுப் பொட்டுகளை அவர்கள் வைக்கவில்லை. சந்தனம் குங்குமம் போன்ற குறிப்பிட்ட மூலிகை பொருட்களையே வைத்துக் கொண்டார்கள். 

குங்குமத்தை 
நான் ஏற்கனவே கூறியபடி தயாரிக்கும் போது அதில் மின்கடத்தும் தன்மை அதிகரிக்கிறது. இதை நெற்றியில் இடும் போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது. இதனால் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளும் வழி எளிதில் கிடைக்கிறது. நெற்றியில் 
பொட்டு வைப்பதால் கண்படுதல் எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும். ஹிப்னட்டிசம் முதலிய மனோவசியங்கள் புரவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.
மின்கடத்தும் தன்மை நமது வழிபாட்டு முறைகளில் நன்றாக மின்சக்தியை ஏற்கக்கூடிய பொருட்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். வேப்பிலை மாவிலை துளசி எலுமிச்சை போன்றவைக்கு இந்த சக்தி அதிகம். 
குங்குமத்தை இந்துக்கள் காரணத்தோடு தான் உபயோகிக்கிறார்கள். 

அதுமட்டுமில்லாது பல அறிவியல் நுணுக்கங்கள் ஒருங்கே இணைந்த பழக்கங்கள் நம் பண்பாட்டில் இருக்கின்றன.

வியாழன், 8 டிசம்பர், 2022

ஒட்டகத்தின் தகவமைப்பு

 பாலைவனங்களில் வாழ்வதற்கேற்ப ஒட்டகங்களில் காணப்படும் தகவமைப்புகளை விவரி. 

  • இதன் நீண்ட கால்கள் பாலைவனத்தில் உள்ள சூடான மணலில் இருந்து உடலை பாதுகாக்கின்றன.
  • இவை நீர் கிடைக்கும்போதெல்லொம் அதிக அளவு நீரை அருந்தி, தன் உடலில் தேக்கி வைத்துக் கொள்கின்றன.
  • உலர்ந்த பாலைவனத்திற்கு ஏற்றாற்போல் தன் உடலில் நீர் சேமிக்கும் தகவமைப்பைப் பெற்றுள்ளன.
  • ஒட்டகம் குறைந்த அளவு சிறுநீரை வெளியேற்றுகிறது. அதன் சாணம் வறண்டு காணப்படும். மேலும் அதன் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதில்லை.
  • ஒட்டகம் தன் உடலில் இருந்து சிறிதளவு நீரையே இழப்பதால் அவற்றால் பல நாட்களுக்கு நீர் அருந்தாமல் உயிர் வாழ முடியும்.
  • ஒட்டகம் திமில் பகுதியில் கொழுப்பை சேமித்து வைக்கின்றது. சக்தி தேவைப்படும் காலங்களில் ஒட்டகம் தன் திமில் பகுதியில் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்பை சிதைத்து ஊட்டம் பெறுகின்றது.
  • ஒட்டகம் பெரிய, தட்டையான திண்டு கால்கள் மூலம் மிருதுவான மணலில் நன்றாக நடக்கும் தன்மையைப் பெற்றுள்ளன. இதனால் ஒட்டகத்தைபாலைவனக் கப்பல்என்று அழைப்பார்கள்.
  • ஒட்டகங்களின் நீண்ட கண் இமைகள் மற்றும் தோல் அதன் கண் மற்றும் காதுகளை புழுதிப் புயலில் இருந்து பாதுகாக்கிறது.
  • நாசித் துவாரங்கள் தூசிகள் உள்ளே செல்வதைத் தடுப்பதற்காக மூடிய நிலையில் காணப்படும்.

 



வியாழன், 10 நவம்பர், 2022

நம்பமுடியாத கதை

   ஃபேஸ்புக்கில் வரும் நம்பமுடியாத கதை 

   ராமாயணத்தில் உண்மையில் மறைக்கப்பட்ட கதாநாயகி யார் என்றால் லட்சுமணனுடைய மனைவி ஊர்மிளா தான். ஏனெனில் கணவன் லட்சுமணன், ராமனுடன் காட்டுக்குச் சென்றவுடன் 14 வருடங்கள் மாமியாருக்காக, தன் வாழ்க்கையைத் தியாகம் செய்தவள்.

   வால்மீகி, கம்பர் இருவரும் இந்தக் கதாபாத்திரத்தை இருட்டடிப்பு செய்து விட்டனர் என்றுதான் தோன்றுகிறது. ஜனகமகாராஜாவின் தத்து மகள் தான் சீதை. ஆனால் ஜனகரின் உண்மையான மகள் ஊர்மிளா! ஜனகரின் தம்பி குஜஸ்த்வஜாவின் மகள் மாண்டவி. இவள் பரதனை மணந்தவள். இன்னொரு மகள் ஸ்ருகீர்த்தி. இவள் சத்ருக்கனை மணந்தவள்.

  இந்த நான்கு சகோதரிகளும் புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக இல்லை! இதற்குத்தான் ஒரே வீட்டில் அக்கா, தங்கையைத் திருமணம் செய்து தருவதற்கு இந்தக் காலத்தில் மிகவும் தயங்குவார்கள். மேலும் லட்சுமணனின் மனைவி ஊர்மிளா உண்மையில் மறைக்கப்பட்ட கதாநாயகி மட்டுமல்லாது, கணவனின் 14 ஆண்டு காலத் தூக்கத்தையும், தானே வாங்கிக் கொண்டு கணவனுக்காக வாழ்ந்தவள்.

   காட்டில் ராமனும் சீதையும் குடிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது குடிலுக்கு வெளியே லட்சுமணன் உறங்காமல் காவல் காத்துக் கொண்டிருப்பான். அப்போது நித்திராதேவி, லட்சுமணனை உறங்க வைக்க முடியாமல் மிகவும் திணறுவாள். அவள் லட்சுமணனிடம் சொல்கிறாள், "இதோ பார், நீ இப்படி உறங்காமல் இருக்கவே முடியாது. நான் உன்னை விட்டு விலக வேண்டுமானால் நீ உன் தூக்கத்தை வேறு ஒரு நபரிடம் பகிர்ந்து கொள். உன்னை விட்டு விடுகிறேன்" என்கிறாள். உடனே லட்சுமணன், "நீ என் மனைவி ஊர்மிளாவிடம் சென்று நான் கூறியதாய் என் தூக்கத்தையும் அவளையே எடுத்துக் கொள்ளச் சொல். நிச்சயம் அவள் ஒப்புக் கொள்வாள்" என்கிறான். நித்திராதேவியும் அப்படியே ஊர்மிளாவிடம் சென்று விஷயத்தைக் கூற, அவளும் கணவனின் நிலைமையைப் புரிந்து கொண்டு, அவன் தூக்கத்தையும் தானே வாங்கிக் கொண்டு, அந்த 14 வருடங்களில் பெரும் பகுதியைத் தூங்கியே கழித்தாள்.

    அவள் அப்படிச் செய்ததன் காரணமாகத்தான் லட்சுமணனால் ராவணன் மகன் இந்திரஜித்தை, கண்ணுக்குப் புலப்படாமல் போர் புரிகின்ற அவனை, கொல்ல முடிந்தது! அது எப்படி என்றால் இந்திரஜித்தை கொல்ல வேண்டுமானால் ஒருவன் 14 ஆண்டுகள் தூங்காமல் கண் விழித்திருக்க வேண்டும் என்று ஒரு தெய்வ நிபந்தனை இருந்து வந்தது. ஊர்மிளா கணவனின் தூக்கத்தை வாங்கிக் கொண்டதால் தான் அது சாத்தியமாயிற்று. ஊர்மிளாவின் உதவி என்பது நம்முடைய மூதாதையர்களின் கண்ணுக்குத் தெரியாத உதவியைப் போன்றது. அது வெளி உலகிற்குத் தெரியாமலேயே போய்விடும் தன்மையைக் கொண்டது. 

  இப்படி நம் வாழ்க்கையிலும் நமக்குத் தெரியாமல் கூட சிலர் உதவி புரிந்திருப்பார்கள். அது கடைசி வரை தெரியாமலும் போகக் கூடும்!

சிவபெருமான் எமனை உதைத்தார்

  திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு  மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...