புதன், 1 டிசம்பர், 2021
பன்னிரண்டாம் திருமுறை_சேக்கிழார்
வியாழன், 18 நவம்பர், 2021
முலையளவே ஆகுமாம் மூப்பு
நல்வழி வெண்பா: 39
பெண்பாற் புலவர் அவ்வையார் அருளியது
பாடல்:
முப்பது ஆண்டிற்குள் முதல்வனை யறி
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின்-செப்புங்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.
விளக்கம்:
ஒருவன் எவ்வளவு கல்வி கற்றாலும், முப்பது வயதிற்குள் ஆணவம், கண்மம், மாயை என்ற மும்மலங்களை கடந்து இறைவனை உணராமல் இருந்தால், அவன் கற்ற கல்வி வயதான பெண்களுக்கு உள்ள மார்பகங்கள் அவள் கணவனுக்கும், அவர்களின் குழந்தைக்கும் பயன்படாமல் வெறும் பெயர் அளவுக்கு இருக்கும் உறுப்பைப் போல, அவன் கற்ற கல்வி ஒன்றுக்கும் பயன்படாமல் வெறும் கல்வி என்று தான் இருக்கும். அதனால் பயனேதும்இல்லை.
கோபம் மூன்று வகை
புதன், 17 நவம்பர், 2021
இன்பமுடன் வாழ்பவர் யார்?
| ஏலாதி 53 கடம் பட்டார், காப்பு இல்லார், கைத்து இல்லார், தம் கால் முடம் பட்டார், மூத்தார், மூப்பு இல்லார்க்கு உடம் பட்டு, உடையராய் இல்லுள் ஊண் ஈத்து, உண்பார் - மண்மேல் படையராய் வாழ்வார், பயின்று. |
பொருள்:
கடன்பட்டவர்களுக்கும், தம்மைக் காப்பவர் ஒருவரும் இல்லாதவர்களுக்கும், பொருளில்லாதவர்கட்கும், தங்கால் முடம்பட்டவர்க்கும், முதிர்ந்தவர்களுக்கும், பெற்றோர் முதலிய பெரியார்க ளில்லாதவர்க்கும், மனமியைந்து அன்புடையவர்களாய்த் தம் வீட்டில் உணவு கொடுப்பித்து உண்பவர், பூமியின்மீது நால்வகைப் படைகளையுமுடைய மன்னர்களாய் மனைவி மக்களுடன் கூடி இன்பமுடன் வாழ்வார்கள்.
கருத்து: கடன்பட்டவர் முதலானவர்க்கு உணவு கொடுத்து உதவி செய்பவர், மன்னராய் இன்பம் மிக்கு வாழ்வார்.
நாலடியார் 354
செவ்வாய், 16 நவம்பர், 2021
திருக்குறள் 622
வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.
வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.
வெள்ளத்தில் முழ்கும் அளவு வரும் தொல்லைகள், அறிவு உடையவர்களின் மனதின் எண்ணத்தினாலேயே அழிந்துவிடும்.
Though sorrow, like a flood, comes rolling on,
When wise men's mind regards it,- it is gone.
ஞாயிறு, 14 நவம்பர், 2021
இனிமையான வாழ்க்கை எப்போது அமையும்?
தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.
நூல்: திரிகடுகம்
ஆசிரியர்: நல்லாதனார்
பாடல் எண்: 12
கருத்து:
முயற்சியை ஆளக் கூடிய திறமையுடைய ஒருவன் பிறருக்கு கடன்படாது வாழ்பவன் ஆவான்.பயிர்த்தொழில் புரிந்து,சமூகத்திற்கே உதவியாக இருப்பவன், விருந்தினர் காத்திருக்க, தான் மட்டும் உண்ணாதவன்ஆவான். ஒற்றாடலில் சிறந்தவன், பிறரின் காரியங்களை, கருத்துக்களை அறிந்து சொல்பவன், சிறிதுகூட மறதி இல்லாதவன்ஆவான். இம்மூன்று இயல்புடையவர்களையும் நண்பர்களாகப் பெற்று வாழ்தல் இனிமையாகும்.
அருஞ்சொற்பொருள்:
தாளாளன்-முயற்சியைக் கொண்டிருப்பவன்
; வேளாளன் - உதவி செய்பவன், பயிர்த்தொழில் புரியும் ஒருவன் ; கோளாளன் - ஒற்றாடல் திறனில்
வல்லவன்,பிறரின் காரியங்களை மனதில் கொண்டவன் ; கேள் – நட்பு
சிவபெருமான் எமனை உதைத்தார்
திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...
-
கோயில் – திருவிருத்தம் குனித்த புருவமும் , கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் , பனித்த சடையும் , பவளம் போல் மேனியில் பால...
-
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க மாறிலா வ...
-
பெற்ற தாய்தனை மகமறந் தாலும் பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் உயிரை மேவிய உடல்மறந் தாலும் ...